குடிகாரா
குடித்து குடித்து குடியை -கெடுக்கும் ..
குடிகார மகராசா ...-நீ -உன் ....
குடிலை மறந்து குட்டி சுவர்ராய் போனயே ..
உனக்கு கிடைக்கும் கூலியெல்லாம் ....
நீ -போதையிலே மிதக்கவிட்டாய் ....
பிள்ளை குட்டி எல்லாத்தையும் ....
கூலி வேலை பார்க்கவிட்டாய் .....
பத்து பாத்திரம் தேய்து .. வந்த ....
கூலி பணத்தையும் திருடிவிட்டாய் .....
வேலையில் இருந்து களைத்து வரும் ...
பிள்ளைகளுக்கு கஞ்சி வைக்க காசில்லையே ..
பவம் அந்த குழந்தைகளோ ....
பசியில் துடித்து போய்விடுமே .....
உன் -வாழ்கை என்னக்கு போதும் ...
இனி -உன்னோடு வாழ மாட்டோம் ...
.பசியிருந்தும் பாலுமில்லாமலும் .-இனி .....
குழந்தைகளை பட்டினியாய் விடமாட்டேன் ....
குழந்தைகளுடன் எங்கோ சென்று .....
சுயமாய் நாங்கள் வாழ்ந்திடுவோம் ...
வெட்டி நண்பர்களின் வய்பேச்சு ...
உன் -வாய்க்கு அரிசி போடாது ....
அனாதையாய் நீ விடப்பட்டால் ......
அத்தனையும் நீ உணர்த்து கொள்வாய் ....
நீ எங்களை தேடா விட்டாலும் ...
எங்கிருந்தாலும் உன்னை நாங்கள் ....
அறிந்து கொள்வோம் எப்போதும் .
உன் -வாழ்வின் கடைச்சிக்குள் ....
உன்னை -நீ மாற்றி கொண்டால் ....
நாங்கள் தேடி வந்து .....
உன்னை ஏற்றுக்கொள்வோம் .....
உன் -முடிவோ மாறாவிட்டால் ......
எமன் -உனக்கு முடிவு சொல்வான் ...
போகின்றோம் -என் கணவா ...
போதை தெளிந்து நீ முளிக்காதே.....
இக கடிதத்தை நீ படித்து விட்டால் ...
பாதை மாறி வந்து விட்டால் ....
உன்னக்கு உண்டு மறுவாழ்வு
வியாழன், 11 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக