திங்கள், 15 ஜூன், 2009

இங்கு படிக்கும் போது இடைவேளையின் ...
எல்லோரும் தணீர் அருந்த என் வீட்டிற்கு...
வருவார்கள் அங்கு இரண்டு குடத்தில் ...
ரெடியாக இருக்கும் தாத்தாவின் கட்டளை படி ....
அப்போதெல்லாம் தண்ணீர் கஷ்ட்டம் ....
தீனிகள் வித விதமாய் விற்கும் ..
பள்ளிவாசலில் ஓரு வயதான பாட்டி ....
குடவாரஞ்சு பழம் கொய்யாபழம் .....
முந்திரிப்பழம் கம்பு இனிப்பு உருண்டை ...
நாறு மிட்டாய் சேவாய் பழம் ...
கெலாக்காய்மாலை கெலாப்பழம் ..
விடாம்பலம் பென்சில் மிட்டாய் ...
இன்னும் நிறைய வகைகள் வைத்து இருப்பார் ...
ஓரு குடையின் கீழ் அமர்ந்து ....
வெயில்லில் பிள்ளைகளுக்கு காத்திருப்பது ....
பாவமாக இருக்கும் அந்த பாட்டிக்கு ...
உதவ அம்மாவிடன் தினமும் ...
காசு வங்கிசென்று பாட்டியிடம் எதாவது ..
வாங்கி ஏழை தோழிகளுக்கு கொடுப்பேன் ...
அங்கு இருக்கும் மைதானத்தில் இடைவேளையின் ..
.போது விளையாடுவோம் அங்கு குரவர்கள் ..
கூட்டம் இருவது குடில்களில் தங்கி இருப்பார்கள் ..
பண்ணி அறுத்து கூறு போடுவார்கள் எப்பா பார்த்தாலும் ..
இன்னும் அந்த கூட்டங்கள் அங்குதான் இருக்கின்றன ...
மைதானத்தில் மோடி மஸ்தான் வித்தைகளும் ...நடைபெறும்

அவள் மிகவும் ஏழை அவளை ....
யாராவது கேலி செய்தால் தாத்தாவிடம்....
சொல்லி கண்டிப்பேன் ..செல்வி ..
அவளுடைய வீடு சுடுகாட்டில் இருக்கும் ...
ஓரு முறை சென்று இருகிறேன் ..
இதில் செல்வியையும் ரேனு நிர்மலா....
இவர்களை இன்றும் பார்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக