புதன், 10 ஜூன், 2009

latha:
கிராமம்
காலைக் கருக்களும் . ...
விடிவெள்ளி தோன்றலும் ....

காகங்களின் கரைசலும் ....
பறவைகளின் கூ கூ சத்தமும் .....

நாய்களின் குரைப்பும்......
கோழிகளின் கூவலும் ....

மேய்ச்சளுக்கு செல்லும் ...
ஆடு மாடுகளின் இரைச்சளும் ..
அழகுதான் அழகுதான் ....

சலசலக்கும் நீரோடையும் ...
பரிசல்பாயும் ஆற்றங்கரையும் ....

அங்கு கேலிபேசி குளிக்கும் .....
ஆண்களும் பெண்களும் ....
காளையரும் கன்னியரும் ...
மாடுகளையும் எஅருமைகளையும் ..
தேய்த்து குளிப்பாட்டுவதும் .....
அழகுதான் அழகுதான் ......

தென்னந்தோப்பின் சலசலப்பும் ........
கதைபேஅசும் மொட்டைபனைமரங்களும் ........
..கதிர் முற்றிய ....வயல்க்காடும் ......
கரிசல்மன்னின் வாசனையும் .....
கட்டுதரிகளின் ஓசையும் ......
ஆழகுதான் அழகுதான் ......

இரைச்சல் இல்லா மண்பாதையில் ....
எப்போதோ -ஜல் ஜல் என-ஓடும் ....
மாட்டுவண்டி ச்சத்தமும் ......
சைகிளின் ரிங் ரிங் சத்தமும் ...
அழகுதான் அழகுதான் ........

யாழோய் ...வாலோய் .....
மாமோய் ... மட்ச்சான் -என
உரிமை பேசி .அழைக்கும் -உறவுகளும்

ஒருவீட்டில் நல்லது நடந்தால் ......
எல்லோரும் கலந்து சந்தோசிப்பதும் ....
துக்கமென்றால் எல்லோரும் ....
துக்கம் அனுச்டிப்பதும் ....
அழகுதான் அழகுதான்.......

முகம் பார்த்த முன்பின் -அறியாத ....
நபர்களிடம் நலம் விசாரிப்பதும் ....
முகவரி தேடு பவர்க்கு ......
வடக்காலே தெக்காலே -என்று ...
சுத்தி சுத்தி பக்கத்து தெருவிற்கு ...
நீளமமாய் வழிகாட்டுதலும் ......
அழகுதான் அழகுதான் ......

பட்சை பசேல் வயல்காட்டில் ...
ஏரோட்டும்.. உழவனும் ....
வயலுக்கு ஏற்றம் இறைத்து
நீர் பாய்ச்சும் உழவனும் ...
களையடுக்கும் பெண்களும் .....
கதிர் அறுக்கும் பெண்களும் ....
ஒரு பாட்டம் வேளைமுடித்து .....
கூழோ கஞ்சியோ ..
கம்மங்களியோ ராகிக்களியோ ...
கருவாடோ ஊருகாயோ .....
தொட்டுக்கொண்டு ஊர்கதைச்பேசி ....
உணவு உண்பதும் .....
அழகுதான் அழகுதான் ...

அறுவடையின் போது -திருவிழா....
கோலத்தில் காட்சி அழிப்பதும் ....
விவசாயிகளின் முகத்திலும் ....
கூலிகளின் முகத்திலும் ...
நல்ல போகம் விளைந்ததுவே....
சிலநாட்கள் பட்டினியை

தள்ளிபோடமுடியும் என்ற
சந்தோஷமும் .தெரிவதும் .....
அழகுதான் அழகுதான் ....

வாரத்தில் ஒருநாள் கூடும் - சந்தையில் ...
நடக்கும் கூத்தும் கும்மாளமும் .....
இளவட்டங்களின் நக்கலும் நாணலும் ...
அவர்கள் பொருள் வாங்கும் அழகும் ....
துண்டு போட்டு மூடி -விரல்களால் ....
ஆட்டுக்கும் மாட்டுக்கும் .....
விலைபேசும் முறையும் ......
சட்டி பானைகளை அடுக்கி .....
அதை அடுக்குமொழி கூவி விர்ப்பதும் ...
அழகுதான் அழகுதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக